vishal and simbu
vishal and simbu

விஷால் நடிக்க வேண்டிய படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இது நடந்தது எப்படி என்ற தகவல்களும் கிடைக்கின்றன.

Simbu and Anand Shankar Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஷால். இவர் தற்போது துப்பறிவாளன் 2, சக்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

துப்பறிவாளன் 2 படத்தின் பட்ஜெட் விஷாலுக்கும் இயக்குனர் மிஷ்கின் இருக்கும் ஏற்பட்ட தகராறில் மிஷ்கின் இப்படத்தை விட்டு வெளியேறினார். இதனால் விஷாலே இப்படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

என் அம்மா வேசியாடா.. பொறுக்கி – விஷாலை விளாசி எடுத்த மிஸ்கின் – பரபரப்பு தகவல்கள்.!

இந்த படங்களை தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடித்து தயாரிக்கவும் இருந்தார். ஆனால் அப்படத்தின் பட்ஜெட் விஷால் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது.

ஏற்கனவே துப்பறிவாளன் 2, சக்ரா ஆகிய படங்களை தயாரித்து வருவதால் இந்தப் படத்தையும் தயாரிப்பது கஷ்டம் என்பதால் அவர் இப்படத்தை தயாரிக்க மறுத்துள்ளார்.

இதனால் ஆனந்த் ஷங்கர் தயாரிப்பாளர் லலித் குமாரை அணுக அவர் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஷாலுக்கு பதில் சிம்பு நடிக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.