Mysskin Blast Vishal
சினிமா விழா ஒன்றில் விஷாலை விளாசி எடுத்துள்ளார் மிஸ்கின்.

Mysskin Blast Vishal : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஸ்கின் விஷாலை வைத்து இயக்கி வெற்றி கண்ட திரைப்படம் துப்பறிவாளன்.

விஷால், பிரசன்னா இன்னும் பலர் நடித்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வந்த நிலையில் இப்படத்தில் இருந்து மிஸ்கின் நீக்கப்பட்டார்.

மிஸ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்ததாகவும் மிஸ்கின் அதிக அளவில் பணத்தை செலவு செய்து விட்டதாகவும் விஷால் பரபரப்பு குற்றசாட்டுகளை பதிவு செய்திருந்தார்.

ஒரே வார்த்தையில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்திய ரஜினி – அவர் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு.!

இந்நிலையில் கண்ணாமூச்சி என்ற வெப் சீரிஸ் நிகழ்ச்சியில் மிஸ்கின் விஷால் மீது குற்றசாட்டை வைத்துள்ளார்.

ஒரு நாள் படப்பிடிப்புக்கு 13 லட்சம் செலவிட்டதாக கூறியதெல்லாம் பொய் புகார். இதுவரை மொத்தமாகவே 7 லட்சம் தான் செய்துளேன்.

விஷாலை என் தம்பியா தான் பார்த்தேன், ஆனால் அவன் எனக்கு துரோகம் செய்து விட்டான், என் தம்பியை அடித்தான். என் அம்மாவை வேசி என பேசினான். பொறுக்கி என விஷாலை தாக்கி பேசியுள்ளார்.

மேலும் ஒரு நாள் ராத்திரி அரசியல் வாதியாக ஆகுறதெல்லாம் நடக்காத விசியம் எனவும் விஷாலை தாக்கியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.