லாக் டவுன் காலத்தில் என்ன செய்வது என தெரியாமல் எதையாவது செய்ய வேண்டும் என சாந்தனுவும் கிகியும் முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.
Shantanu Kiki Video About Her Next Plan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சாந்தனு. இவரது மனைவி கிகி சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.
இவர்கள் இருவரும் லாக் டவுன் காலத்தில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
எம்மா இது உடம்பா வேறு எதுனாவா?? கிகி வெளியிட்ட புகைப்படத்தால் மிரண்டு போன திரையுலக பிரபலங்கள்.!
அந்தவகையில் தற்போது அதன் அடுத்த கட்டமாக லவ் வித் சாந்தனு அண்ட் கிகி என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கியுள்ளனர்.
இந்த சேனலில் பல சுவாரசியமான வீடியோக்களை அவர்கள் பதிவேற்ற இருப்பதாக கூறியுள்ளனர். அதற்காக அந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு சாந்தனு கூறி உள்ளார்.
மேலும் கடைசியில் என்னையும் இப்படி சொல்ல வச்சுட்டாங்களே மா என பீல் பண்ணுகிறார். இதனை பார்த்து கிகி ஏய் ச்சீ போ என கூறுகிறார்.
இதோ அந்த வீடியோ