Secret Behind Name of Thala
Secret Behind Name of Thala

அஜித்துக்கு தல என பட்டப் பெயர் வைத்தது யார் என்பது குறித்த தகவலை பிரவீன் காந்தி வெளியிட்டுள்ளார்.

Secret Behind Name of Thala : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் முருகதாஸ். கத்தி, சர்க்கார் படத்தின் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய இவர் தர்பார் படத்தின் மூலம் இன்னும் கொஞ்சம் டேமேஜ் ஆனார்.

முருகதாஸ் தமிழ்த் திரையுலகில் அஜித் கொடுத்த தீனா பட வாய்ப்பு மூலமாகத்தான் அறிமுகமானார். இந்த படத்திலிருந்து தான் அஜித்திற்கு தல என்ற பட்டப் பெயர் வந்தது. ஆனால் அந்தப் பட்டப் பெயரை முருகதாஸ் வைக்கவில்லை என தற்போது தெரியவந்துள்ளது.

நம்ப வைத்து ஏமாற்றிய சூர்யா, விக்ரம் – பேட்டியில் கூறி வருத்தப்பட்ட பிரபல இயக்குனர்

தொடர்ந்து முருகதாஸ் பற்றி அடுத்தடுத்து ஷாக்கான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இவரின் குருநாதரான பிரவீன் காந்தி என்பவர் பிரபல இணையதள பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது அஜித்துக்கு தல என பெயர் வைத்தது முருகதாஸ் இல்லை அவரின் உதவி இயக்குனர் மோகன் தான். ஆனால் இந்த தகவல் இதுவரை வெளிவராமல் மூடி மறைக்கப்பட்டு விட்டது.

முருகதாஸ் நான் தான் தல என பெயர் வைத்தேன் என்று பெருமை வாங்கி கொண்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.