Sarkar Hindi rights sold  : Sarkar Hindi rights sold for 23 crore | Thalapathy Vijay | Keerthy Suresh | AR.Rahman | Kollywood

Sarkar Hindi rights sold  :

சர்கார் படத்தின் இந்தி உரிமம் ரூ. 23 கோடிக்கு வியாபாரம் ஆகி இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

பல தடைகளை, பல சர்ச்சைகளை கடந்து சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் 80 நாடுகளில் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சுமந்துகொண்டு கடந்த ஆண்டு திரைக்கு வந்தது.

மீண்டும் பாகுபலி இயக்குனருடன் இணையும் அனுஷ்கா – ரசிகர்களுக்கு பிரம்மாண்ட விருந்து!

எதிர்பார்த்தது போல் மக்களுக்கான விழிப்புணர்வு படம் என்ற போர்வையில் ஆளும் அரசை காட்டமாக விமர்சித்து வெளியானது சர்கார்.

இளைஞர்களுடன் இணைந்து ஆட்சியை கவிழ்ப்பது, தேர்தலில் வெற்றிபெற்று புது ஆட்சி அமைப்பது என தனது வருங்கால அரசியல் பயணத்திற்கு சர்காரின் மூலம் அடித்தளம் அமைத்தார் விஜய்.

வணிக ரீதியாகவும் சர்கார் விஜய்யின் கேரியரில் மிகப்பெரிய மைல்கல் படமாக அமைந்தது. உலகம் முழுக்க 250 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூல் செய்து அசத்தியது.

இதுஒருபக்கம் இருக்க தற்போது இப்படத்தின் இந்தி உரிமம் 23 கோடிக்கு வியாபாரம் ஆகி இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஒரு தமிழ் படத்தின் உரிமம் இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆகியிருப்பது இதுவே முதல்முறை என்று கூறுகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.