Dikkiloona,
நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படமான ‘டிக்கிலோனா’-வின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Santhanam Dikkiloona first look poster – காமெடி நடிகராக இருந்து ஹீரோ அந்தஸ்திற்கு உயர்ந்தவர் சந்தானம். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அவர் முடிவு செய்திருப்பதால் கடந்த சில வருடங்களாகவே அவரை அதிகம் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. ஆனால், ஹீரோயிசம் செட் ஆகாத நிலையில் தில்லுக்கு துட்டு 3 மற்றும் ஏ1 ஆகிய திரைப்படங்கள் மூலம் காமெடி கலந்த கதைகளே தனக்கு பொருந்தும் என அவர் தற்போது புரிந்து கொண்டுள்ளார்.

இன்னும் எடை குறையலயா? நடிகை அனுஷ்காவா இது? – ரசிகர்கள் அதிர்ச்சி

எனவே, அப்படிப்பட்ட கதைகளை தேர்ந்தெடுத்து அவர் நடித்து வருகிறார். இதில் ஒன்றுதான் அவர் இளம் இயக்குனர் கார்த்திக் யோகியுடன் கை கோர்த்திருக்கும் ‘டிக்கிலோனா’.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதை நடிகர் சந்தானம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here