தளபதி விஜய்க்கு கையில் காயம் ஏற்பட வெங்கட் பிரபுவுக்கு கோரிக்கை குவிந்து வருகிறது.
Reason Behind Injury in Thalapathy Vijay Hand : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் திரிஷா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் இறுதி கட்டம் வேலைகள் படு ஜோராக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த கில்லி படத்தில் கொண்டாடும் விதமாக இந்த படக்குழுவினர் விஜயை சந்தித்து மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அப்போது விஜயின் கையில் ஏற்பட்டிருக்கும் காயத்தை பார்த்த ரசிகர்கள் அதனை ஜூம் செய்து போட்டோவாக வெளியிட்டு வருகின்றனர்.
இந்த காயம் சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்டிருக்கலாம் என்ற காரணத்தினால் எங்கள் தங்கம் தளபதியை பத்திரமா பாத்துக்கோங்க வெங்கட் பிரபு என கோரிக்கை வைத்து வருகின்றனர்.