பாக்கியலட்சுமி ஜெனிபரின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Baakiyalakshmi Jenifer in Karthikai Deepam Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் முதல் முதலாக நடித்து வந்தவர் ஜெனிஃபர்.
எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர் கர்ப்பம் காரணமாக இந்த சீரியலில் இருந்து வெளியேறிக்கொண்டார். அதன் பிறகு வேறு எந்த சீரியல் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
ஆமாம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் ரம்யா விஸ்வநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். லேடிஸ் ஹிட்லர் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் தான் இவர் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் கார்த்திக்கு வில்லியான கதாபாத்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.