சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இன்று, செஸ் சாம்பியன்ஷிப் குகேஷ் சந்திப்பு: வைரலாகும் நிகழ்வு..

ஸ்போர்ட்ஸில் சாதனை படைத்தவருக்கு, சினியில் சாதனை படைத்தவர் மேலும் ஊக்கப்படுத்திய நிகழ்வு குறித்து இங்கே காண்போம்..
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த ‘அமரன்’ பட வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மூன்று படங்கள் தயாராகி வருகின்றன. அதில், ஒரு படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். எஸ்கேவுக்கு ஜோடியாக ருக்மணி வஸந்த் நடிக்கிறார்.
இதுதவிர, சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம், இதனையடுத்து, சுதா கொங்கரா இயக்கத்திலும் நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயனின் 25-வது படமாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்க, வில்லனாக ஜெயம் ரவி நடிக்க, அதர்வாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் அண்மையில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை நேரில் சந்தித்து, அவருக்கு பாராட்டுகளை தெரிவித்ததோடு, காஸ்ட்லியான வாட்ச் ஒன்றையும் பரிசாக கொடுத்திருக்கிறார்.
குகேஷ், சிறு வயதில் இருந்தே சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகராம். இதை அறிந்த சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸாக அவரை சந்தித்து வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
முன்னதாக ‘கோட்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்ததற்காக சிவகார்த்திகேயனுக்கு விஜய் ஒரு வாட்சை பரிசாக வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகையில், தளபதி விஜய் பாணியை ஃபாலோ செய்திருக்கிறார் எஸ்கே.
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற, குகேஷ் நேற்று சிவகார்த்திகேயனை சந்தித்த நிலையில், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். ரஜினிகாந்த்
‘பரமஹம்ச யோகானந்தா’எழுதிய ஆட்டோ பயோகிராபி ஆப் ஏ யோகி என்கிற புத்தகம் ஒன்றை குகேஷுக்கு பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி தெறிக்கிறது.
