திருமணம் மற்றும் விவாகரத்து பற்றி, சரத்குமார் கூறிய கருத்து
சினிமா உலகில் நிகழும் காதல் திருமணமும் விவாகரத்தும் பேசுபொருளாகி வருகின்றன. இந்நிலையில், சரத்குமார் தனது வாழ்வியல் குறித்து வெளிப்படையாக பேசியவை குறித்துப் பார்ப்போம்..
சரத்குமார், தனது முதல் மனைவியான சாயாவை விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு, அடுத்ததாக ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். சரத்குமாருக்கும் சாயாவுக்கும் பிறந்தவர் நடிகை வரலட்சுமி ஆவார். அவரும்,தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில்தான் அவருக்கு திருமணம் முடிந்தது.
இந்நிலையில், சரத்குமார் குறிப்பிடும்போது, ‘ எனக்கு 70 வயதாகி விட்டது. இருந்தாலும், நான் இன்னமும் இளமையாக இருப்பதற்கு ஒரே காரணம் எனது ஜீன் மட்டுமே. ‘உடல் ஆரோக்கியம் ரொம்பவே முக்கியம்’ என எனது தந்தை சின்ன வயதிலிருந்தே எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். இதனால், இன்னமும் நான் ஒர்க் அவுட் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.
திருமணம் ஆவதோ இல்லை விவாகரத்து பெறுவதோ; இல்லை விவாகரத்துக்கு பிறகு இன்னொரு திருமணம் செய்கிறோமோ, அதெல்லாம் எந்த முறையில் செய்கிறோம் என்பதுதான் இங்கு முக்கியம்.
நான் முதல் மனைவியை பிரிந்து, இரண்டாவது திருமணம் செய்திருக்கிறேன். மனம் ஒத்துதான் பிரிந்தோம். அப்படி எத்தனையோ பேர் இதுவரை பிரிந்திருக்கிறார்கள். மீண்டும் அவர்கள் சேர்ந்திருக்கிறார்கள்.
நாங்கள் அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்: நான் முதல் மனைவியை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்து கொண்டாலும், என் முதல் மனைவி, குழந்தைகள் எல்லாம் ஒன்றாக ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்.
என்னுடைய முதல் மனைவி எங்களுடன் இருப்பதால், இரண்டாவது மனைவி எந்த விதமான அசௌகரியத்தையும் உணரவில்லை என்பதே உண்மை.
இன்னும் சொல்லப்போனால், ராதிகா எனக்கு நிறைய உதவிகள் செய்தார். ‘சரத்குமாருக்கு மகள் என்றால், அவர் எனக்கும்தான் மகள்’ என்று கூறினார்.
அதனையடுத்து, வரலட்சுமியின் திருமணத்தில் சாயாவும் கலந்துகொண்டார். ராதிகா முழு ஒத்துழைப்பு கொடுத்தார்’ என்றார்.