மன்சூர் அலிகானின் மகன் ‘போதைப்பொருள் வழக்கில்’ காவல்துறைக்கு, கோர்ட் உத்தரவு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டதை அடுத்து, இன்று பிறப்பித்த நீதிமன்ற உத்தரவு வருமாறு:
சென்னை, முகப்போ் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி செயலி மூலமாக கஞ்சா மற்றும் மெத்தபட்டமைன் போன்ற போதைபொருள்களை விற்பனை செய்ததாக, கல்லூரி மாணவா்கள் 5 போ் ஜெ.ஜெ.நகா் போலீசாரால் கைது செய்யப்பட்டனா்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் கடத்தலில், மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்குக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்தையடுத்து, போலீசார் கைது செய்தனர்.
மன்சூர் அலிகான் மகன் துக்ளக் மற்றும் அவரது நண்பர்களான சேது சாகிப், முகமது ரியாசுதீன், பைசல் அகமது என அவரோடு கைதான 7 பேருக்கும் நீதிமன்றக் காவல் வழங்கி, அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர், மன்சூர் அலிகானின் மகன் துக்ளக், ஜாமீன் கோரிய மனுவை அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி, துக்ளக் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ‘தனக்கு ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த மனு சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘மனுதாரர் தரப்பில் தன்னிடம் இருந்து எந்த போதைப்பொருளும் பறிமுதல் செய்யபடாத நிலையில், தன்னை கைது செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், மனு மீதான விசாரணையை டிசம்பர் 26-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, ஜாமீன் மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி, ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 30-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
மன்சூர் அலிகானின் மகன் துக்ளக், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில், விஸ்காம் படித்து வருகிறார்.