Pushpa 2

ஒரு விஷயத்தை செய்துவிட்டு தான் சொல்லவேண்டும்: தனுஷ் வாய்ஸ்

சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு, பின்புலம் இருப்பது முக்கியமில்லை. தனக்கென்று தனித்த திறமை முக்கியம். இதில், வென்று வாகை சூடியவர்களில் தனுஷ் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

அவ்வகையில், பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்தும் வருகின்றார். கிராமத்து பின்னணியில் ஒரு பீல் குட் படமாக தயாராகும் இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக, தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படம், பிப்ரவரி மாதம் ரிலீசாக உள்ளது.

இவ்வாறு செம பிசியாக இருக்கும் தனுஷ், பல மொழிகளிலும் நடித்து வருகின்றார். ‘குபேரா’ என்ற நேரடி தெலுங்கு படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் நம்பிக்கை பற்றி பேசியிருக்கும் ‘ஸ்பீச்’ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

அதாவது, தனுஷ் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படம் ஒரு வெற்றிப்படமாக இருந்தாலும், முதல் படத்திலேயே கடும் விமர்சனங்களை சந்தித்தார் தனுஷ். இருந்தாலும், தொடர்ந்து போராடி இன்று ஹாலிவுட் படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். தேசிய விருது உட்பட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் தனுஷ், ‘நான் 2002-ம் ஆண்டு தேசிய விருது வெல்வேன் என்றோ, ஹாலிவுட் படங்களில் நடிப்பேன் என்றோ கூறியிருந்தால், அனைவரும் கண்டிப்பாக சிரித்திருப்பார்கள். எனவே, ஒரு விஷயத்தை செய்துவிட்டு தான் சொல்லவேண்டும் என நினைத்தேன். என் மீது நம்பிக்கை வைத்தேன்’ என கூறினார் தனுஷ்.

இவரின் இந்த ஸ்பீச், தனுஷ் ரசிகர்களால் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு செம வைரலாகி வருகிறது. ஆம், எதை இழந்தாலும் ஒருவர் இழக்கக் கூடாத ஒன்று தன்னம்பிக்கை தானே.!