அருணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த குடும்பத்தினர்..வெளியான ஐந்தாவது ப்ரோமோ..!!
இன்றைய ஐந்தாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான ஐந்தாவது ப்ரோமோவில் அருண் குடும்பத்தினரை எதிர்பார்த்த நிலையில் பிக் பாஸ் தவிர்க்க முடியாத காரணத்தினால் உங்கள் குடும்பத்தில் இருந்து இன்று வர முடியவில்லை என்று சொல்ல அருண் என்னாச்சு என்று பதறுகிறார்.வீடியோ கால் பண்ணுவாங்க என்று சொல்ல வீடியோ காலும் கனெக்ட் ஆகவில்லை பிறகு கண்கலங்கி உட்கார்ந்து கொண்டிருக்க அவர்கள் அம்மா அப்பா வந்து நின்று இன்ப அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram