ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தில் மம்முட்டி?

Web Ads

ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை தற்போதைக்கு KHxRK என அழைக்கிறார்கள். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது.

KHxRK படத்தின் ப்ரொமோ வீடியோ வெளியாகி, உங்க பட ஹீரோ யாரு நெல்சன்? என சினிமா ரசிகர்களை கேட்க வைத்துவிட்டது. இந்நிலையில் KHxRK படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்குமாறு மம்முட்டியை கேட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் கேங்ஸ்டர் நண்பராக மம்முட்டி நடிக்கிறார். கமலும், மம்முட்டியும் இதுவரை சேர்ந்து நடித்ததே இல்லை. அதனால் மம்முட்டியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற தன் ஆசையை இந்த படம் மூலம் நிறைவேற்றிக் கொள்ள அவரை நெல்சன் திலீப்குமாரிடம் பரிந்துரை செய்துள்ளார் கமல் என கூறப்படுகிறது.

ரஜினிகாந்தும், மம்முட்டியும் சேர்ந்து மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் நண்பர்களாக நடித்திருந்தார்கள். அந்த நட்பு இன்று வரை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் மம்முட்டியுடன் சேர்ந்து நடிக்கப் போகிறார் சூப்பர் ஸ்டார்.

rajini and kamal movie movie join actor mammootty
rajini and kamal movie movie join actor mammootty