வக்கீலாக வடிவேலு நடிக்கும் ‘போர்முழக்கம்’ பட அப்டேட்ஸ்..

Web Ads

வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது.
முன்னணி காமெடி நடிகரான வடிவேலு தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல் தற்போது ‘போர்முழக்கம்’ என்ற படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

லாலு மற்று டோனா தாமஸ் தயாரிக்கும் இப்படத்தை பினில் இயக்கவுள்ளார். ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் வக்கீலாக வடிவேலு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கவுள்ளார்.

Web Ad 2

ஸ்ரீநாத் பாசி நடிப்பில் வெளியான ’போங்கலா’ என்ற மலையாள படத்தை இயக்கியவர் பினில். அவருடைய இயக்கத்தில் உருவாகும் முதல் தமிழ் படமாக ‘போர்முழக்கம்’ உருவாகிறது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் இயக்குநர் பினில்.

vadivelu to play public prosecutor in pormuzhakkam movie
vadivelu to play public prosecutor in pormuzhakkam movie