பாடகி சின்மயி பாடுவதற்கு தடை விதித்த விவகாரம்: நடிகர் ராதாரவி டென்ஷன்..
மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ந்தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில், பாடகி சின்மயி ‘முத்த மழை’ என்ற பாடலை பாடியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. படத்தில் ‘தீ’ பாடியதை விடவும் சிறப்பு என பாராட்டி வருகின்றனர்.
இந்த இனிய குரலையா பாடவிடாமல் தடை விதித்தீர்கள்? என ரசிகர்கள் பலரும் இணையத்தில் கேள்வியெழுப்பி வருகின்றனர். முன்னதாக, மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடலை பாடி அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, சின்மயியை நீக்கி தமிழ்ப்படத்தில் பாட தடை விதிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக சின்மயி தமிழைத் தவிர்த்து தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் பாடி வருகிறார்.
‘முத்த மழை’ பாடலை மேடையில் சின்மயி பாடியதற்கு பின், அவருக்கு ஏன் தடை விதித்தார்கள்? என பலரும் கேட்டு வரும் நிலையில், டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவரான ராதாரவி பதில் அளித்துள்ளார்.
பாடகி சின்மயி 70-க்கும் மேற்பட்ட படத்திற்கு டப்பிங் பேசி இருக்கிறார். அந்த படத்தில் இருந்தே 10 சதவிகிதம் டப்பிங் யூனியனுக்குத் தான் போகும், அப்படி இருக்கும்போது என்னால் 250 ரூபாயை சந்தாவாக கட்டமுடியாதா என்று சொல்லியிருக்கிறார்.
அவ்வகையில், சின்மயிக்கு தடை விதித்தது ஏன்? என தொகுப்பாளினி கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த ராதாரவி, ஆண்டு சந்தா கட்டவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, அவர் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார். அங்கே சென்று, நான் வாழ் நாள் முழுக்க சந்தாவை கட்டிவிட்டேன் என பொய் சொன்னார். இதனால், தான் அவருக்கு தடை விதிக்கப்பட்டது என்றார்.
அதற்கு தொகுப்பாளினி, நீங்கள் ஒரு மூத்த நடிகர், சின்ன பெண் சின்மயி, ஏதோ தவறு செய்துவிட்டார். அவரை அழைத்து, எதற்கு தேவையே இல்லாத பிரச்சினை சந்தா கட்டு என சொல்லியிருக்கலாம், அதை விட்டுவிட்டு, என் பேச்சை கேட்கவில்லை என்றால், வாழவே முடியாது என்று ஒருவரின் திறமையை அடியோடு அழிப்பது எந்த வகையில் நியாயம்? என கேள்வி கேட்டார்.
இந்த கேள்வியால் கடுப்பான ராதாரவி, நீங்கள் நன்றாக கேள்வி கேட்கிறீர்கள், நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், இந்த கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. ஏன் என்றால், இது ஒரு தேவையில்லாத ‘வேஸ்ட் டாப்பிக்’ இதற்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை’ என பேட்டியை முடித்துக்கொண்டார். தற்போது இந்நிகழ்வு வைரலாகி வருகிறது.
