Pushpa 2

ஸ்ரீலீலா மீது பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா செம கடுப்பு: ஏன் தெரியுமா?

நடிகை ஸ்ரீலீலாவின் மீது, சில முன்னணி நடிகைகள் செம கடுகடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய சினிமா சந்தையை பார்ப்போம்..

இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பகத் பாசில் காம்போவில் வெளிவந்த புஷ்பா-2 படம், செம மாஸா தெறிச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 7 நாட்களை கடந்த நிலையில், ரூ.1025 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

படத்தில், அல்லு அர்ஜூன் எப்படி ஆக்‌ஷன் காட்சியில் கலக்கியிருந்தாரோ, அதுபோல ராஷ்மிகா மந்தனாவும் தன் பங்கிற்கு ரசிகர்களை ஈர்த்து விட்டார்.

இதையெல்லாம் தாண்டி, ஒரேயொரு குத்துப்பாட்டுக்கு வந்த ஸ்ரீலீலாவின் டான்ஸ் செம ஃபேமஸாகி விட்டது. இந்த பாடலின் மூலமாக மற்ற ஹீரோயின்களின் பட வாய்ப்பும் தற்போது ஸ்ரீலீலாவிற்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அந்த நடிகைகளின் காட்டமான கடுப்பையும் லீலா எதிர்கொள்ள வேண்டியதாகி விட்டதோ? என எண்ணத் தோன்றுகிறது.

அதாவது, 23 வயதில் ‘குண்டூர் காரம்’ படம் மூலமாக பிரபலமடைந்த ஸ்ரீலீலா, கவர்ச்சியிலும் கலக்கிய நிலையில், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

‘குண்டூர் காரம்’ படத்தில் முதலில் பூஜா ஹெக்டே தான் ஹீரோயினாக நடிக்க இருந்தார். ஆனால், அவர் பிராஜக்டிலிருந்து வெளியேறிய பிறகு ஸ்ரீலீலா படத்தில் இணைந்தார்.

இந்நிலையில் தான் இப்போது ‘விருபாக்‌ஷா’ பட இயக்குநர் கார்த்திக் வர்மா தண்டு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் மீனாட்சி சவுத்ரி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இப்போது, அவருக்குப் பதிலாக ஸ்ரீலீலா படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். புஷ்பா 2 படத்தில் இடம் பெற்ற ‘கிஸ்ஸிக்’ குத்தாட்ட பாட்டுக்கு பிறகு, தெலுங்கு நடிகர் நிதின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராபின்ஹூட்’ படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் முதலில் ராஷ்மிகா தான் நிதினுக்கு ஜோடியாக நடிக்க இருந்தார். ஆனால், கால்ஷீட் காரணமாக ராஷ்மிகா மந்தனா விலகிய பிறகு, ஸ்ரீலீலா படத்தில் இணைந்துள்ளார்.

இப்படியே.. பூஜா ஹெக்டே, மீனாட்சி சவுத்ரி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரது வாய்ப்புகளை எல்லாம் ஸ்ரீலீலா தட்டிப் பறித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும், ‘மாஸ் ஜாத்தாரா’ படமும், பவன் கல்யாண் படமும் லீலா வசம் உள்ளது.

அதாவது, ஸ்ரீலீலாவின் நடன லீலைகள், திரையில் வலைகளாய் விரிகின்றன. அதில், அதிக ரசிகர்கள் விரும்பி விழுகின்றனர். பின்னே வரத்தானே செய்யுமப்பு வாய்ப்பு..!