Production Company Details for Simbu Mysskin Movie
Production Company Details for Simbu Mysskin Movie

சிம்புவின் அடுத்த படத்தை தயாரிக்க இருப்பது யார் என்பது உறுதியாகியுள்ளது.

Production Company Details for Simbu Mysskin Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி பரபரப்பாக நடந்து வந்த நிலையில் கரோனா வைரஸ் அத்தனையும் கெடுத்து விட்டது. ஆம் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் பிரமாண்ட படத்தில் நடிக்க இருந்த அஜித், இறுதியில் ட்ராப் ஆன கதை – முதல் முறையாக வெளியான தகவல்.!

ஊரடங்கால் வீட்டிலிருக்கும் சிம்பு இடைவிடாது ஒர்க்கவுட் செய்து வருகிறார். அந்த வீடியோக்களும் வைரலாகி இருந்தன.

மேலும் சிம்பு மாநாடு படத்திற்குப் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அந்தப் படம் தற்போது உறுதியாகியுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் போலீஸ் கதையில் தான் சிம்பு நடிக்க உள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்பு மஃப்டி படத்தின் ரீமேக்கில் நடித்து வந்தார். ஆனால் இந்தப் படம் பாதியிலேயே நின்று விட்டதால் சிம்புவின் கால்ஷீட்டை அடுத்த படத்திற்கு பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.