Premalatha Vijayakanth : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, DMDK, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

Premalatha Vijayakanth :

திருப்பூர்: தமிழகத்தில் நமது தர்மபிரபுவான கேப்டன் விஜயகாந்தின் ஆட்சி மலர்ந்தே தீரும்! என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக சார்பில் நடந்த விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் புகழ்ந்து பேசியுள்ளார்.

திருப்பூரில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சியின் 15-ஆம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை திருப்பூர்- காங்கேயம் சாலையில் உள்ள ஓட்டல் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் தேமுதிக பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ‘இங்கு சுற்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன., திருப்பூர் காவல் ஆணையர் மிக கடுமையாக செயல்பட்டுள்ளார். பேனர் வைக்க கூடாது என்றால் அதை ஏற்கும் கட்சி தேமுதிக.

நீங்கள் சொல்லி அதை ஏற்கும் நிலையில் தேமுதிக இல்லை. இங்குள்ள பேனர் தேமுதிக தொண்டர்களின் வியர்வையில் வந்தது. இது முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி. சாலையில் வீசப்பட்ட பேனர்களால் தொண்டர்கள் கவலை அடைந்தனர்.

ஜி.எஸ்.டி. யால் நெசவும் பின்னலாடை தொழிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விரைவில் பிரதமரை சந்தித்து தொழில் வளம் பெற திட்டங்களை அறிவிக்க தேமுதிக வலியுறுத்தும். தமிழக முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈட்டி வந்துள்ளார்.

ரஜினிக்கு கண்டமா? ரசிகர்கள் ஆவேசம் – பதறி போய் விளக்கம் கொடுத்த பாலாஜி ஹாசன்.!

100 நாட்கள் ஆட்சி செய்த மத்திய அரசு என்ன செய்தது என கேட்கிறார்கள். காங்கிரஸ் 100 ஆண்டுகள் ஆட்சி செய்தது. என்ன செய்தது.?’ என கேள்வி எழுப்பினார்.

மேலும் “பேனர் கலாச்சாரத்தை துவக்கியதே திமுகவினர் தான். தற்போது அதிமுக பேனர் விழுந்ததும் இனி பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன்(!) என்கிறார்.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் எப்படி இருக்க வேண்டும் என வரலாற்றை படைத்தவர் கேப்டன். ஸ்டாலின் அதை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். தேமுதிக முப்பெரும் விழா அறிவித்த உடன் அதை காப்பியடித்து திருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா நடத்துகிறது.

இந்நிலையில் அண்ணாவுக்கு 111வது பிறந்தநாள் திமுகவுக்கு பட்டை நாமம் போடும் நாள்.

அர்ஜூனராக கிருஷ்ணராக இருந்து தமிழ்நாட்டை காப்பவர் கேப்டன். கர்ணனாக, தருமராக நமது தர்மபிரபுவின் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்தே தீரும்..! ” என பிரேமலதா விஜயகாந்த் புகழாரம் சூட்டினார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.