Pranab Mukherjee Passes Away
Pranab Mukherjee Passes Away

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Pranab Mukherjee Passes Away : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் பரவி பெரும் சேதத்தையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸ் தொற்றால் சாதாரண மக்கள் முதல் மிகப்பெரிய அரசியல் தலைவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் உயிரழந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சமீபத்தில் கன்னியாகுமரி தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்பி வசந்த குமார் அவர்கள் காலமாகி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது அடுத்த சோகமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் விஜய், அஜித் பட தயாரிப்பாளர் சிகிச்சை பலனின்றி பலி – அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம், இவர் எந்த நடிகரின் அப்பா தெரியுமா?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த பிரணாப் முகர்ஜி அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

இவருக்கு தற்போது 84 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்தியாவின் 13-ஆவது குடியரசுத் தலைவராக இருந்தவர். பிரணாப் முகர்ஜியின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.