Producer Swaminathan Passes Away

கரோனா வைரஸால் விஜய் பட தயாரிப்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Tamil Producer V Swaminathan Passes Away : சீனாவில் தோன்றிய கொரோனவைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்திலும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கி வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொடரிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தைத் தொட்டுள்ளது.

நடிகர் விஜய் ஒரு ரவுடி.. பணம் கொடுத்து எனக்கு எதிரா பேச வைக்கிறார் – நடிகை வெளியிட்ட சர்ச்சை வீடியோ

உயிரிழப்பு 5 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த தயாரிப்பாளர் வி சுவாமிநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பகவதி கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அன்பே சிவம் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை மற்றும் தல அஜித்தின் உன்னைத்தேடி ஆகிய படங்களை தயாரித்திருந்தார்.

தற்போது இவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் கும்கி படத்தில் காமெடியனாக நடித்த அஸ்வின் ராஜாவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.