பராசக்தி படத்தில் இணைந்த விஜய்,அஜித் பட நடிகை.. புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட பதிவு..!
பராசக்தி படத்தில் இணைந்துள்ளார் விஜய் அஜித் பட நடிகை.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து சுதா கொங்கார இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் ,ஸ்ரீலீலா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தை நடித்துள்ளனர். இந்நிலையில் அஜித் மற்றும் விஜய் படத்தில் நடித்த பாப்ரி கோஷ் பராசக்தி படப்பிடிப்பிற்கு பிறகு சிவகார்த்திகேயன் உடன் எடுத்த புகைப்படத்தை அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram