‘தலைவி’ திரிஷாவுக்கு வந்த திடீர் காதல்: ரசிகர்கள் கமெண்ட்ஸ்

தலைவி திரிஷா காதலிக்கும் அந்த புதிய நபர் யார்?. இது குறித்த தகவல்கள் காண்போம்..
அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ படத்திலும் திரிஷா ஜோடியாகியுள்ளார். மேலும் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள தக் லைஃப், சிரஞ்சீவியின் ‘விஸ்வம்பரா’ சூர்யா-45 என திரிஷாவுக்கு பல படங்கள் உள்ளன.
குட் பேட் அக்லி படத்தின் மூலம் அஜித்-திரிஷா ஜோடி ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் டிரைலர் வெளியிடப்படுகிறது.
திரிஷா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய செல்ல நாய்க்குட்டியை தூக்கிக் கொண்டு ஸ்குவாட் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.
திரிஷா ஓவர் ஸ்லிம் ஆகிவிட்டதை பார்த்து ரசிகர்கள், ‘இதுக்கு மேல உடல் எடையை குறைக்க வேண்டாம் தலைவி’ என கேட்டுக்கொண்டனர்.
தற்போது பச்சை நிற பட்டுச்சேலை அணிந்து கழுத்தில், காதில், மூக்கில், கையில் தங்க நகைகளை அணிந்து கொண்டு திரிஷா வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் அதற்கு கேப்ஷனாக ‘Love always wins’ என அவர் பதிவிட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.
41 வயதாகும் நடிகை திரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். திரிஷாவுக்கு புதிதாக காதல் மலர்ந்துள்ளதா? என்றும் யாரு அந்த அதிர்ஷ்டக்காரர் என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
நகை அல்லது பட்டுப் புடவை விளம்பரத்துக்குத்தானே இதெல்லாம் போட்டிருக்கீங்க என்றும், ‘அதெல்லாம் ஒன்னுமில்ல, 23 வருஷமா மெயின்டைன் பண்ற அழகை மேலும் ஃபோகஸ் பண்றாங்க’ எனவும் ஹார்டின் விட்டு வருகின்றனர்.