Web Ads

தனது காரை பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு, விக்ரம் அன்புக்கட்டளை

Web Ad 2

விக்ரம் மற்றும் அவரது ரசிகர்கள் பற்றிய வைரல் நிகழ்வு காண்போம்..

அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ படம் திட்டமிட்டபடி 27ஆம் தேதி காலையில் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றாலும், படக்குழு நடத்திய பல கட்ட போராட்டங்களுக்குப் பின்னர், முதல் காட்சி, 27-ம் தேதி மாலையில் திரையிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது இணையத்தில் வேகமாக ஒரு நிகழ்வு பரவி வருகிறது. அதாவது, விக்ரம் தனது காரில் படத்தின் புரோமோஷனுக்காக ஹைவேயில் வேகமாக சென்றுகொண்டு உள்ளார். காரில் செல்வது விக்ரம்தான் என தெரிந்து கொண்ட ரசிகர்கள் இருவர், அவரது காரை விரட்டிப் பிடித்துள்ளார்கள்.

இது மட்டும் இல்லாமல், காரை வேகமாக பின் தொடர்ந்து சென்றது மட்டும் இல்லாமல், காரில் உள்ள விக்ரமைப் பார்த்ததும் வீடியோ எடுத்துள்ளார்கள். அப்போது எடுத்த வீடியோ தான் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தனது காரை நிறுத்தி, ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட விக்ரம், தனது ரசிகர்களை ஹெல்மெட் போட்டுக் கொண்டு இரு சக்கர வாகனங்களை ஓட்டும் படி அறிவுறுத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.