P. Chidambaram Case : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, Gongress, P. Chidambaram , Rajiv Gamdhi

P. Chidambaram Case :

டெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் நடத்திய விசாரணை மற்றும் அவரின் வழக்கு விவரங்கள் குறித்த அறிக்கையை அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

பெற்ற மகளையே கடத்திய வனிதா, எந்நேரமும் கைதாக வாய்ப்பு – அதிர்ச்சி தகவல்.!

இதையடுத்து அவரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதியளித்தது. இந்நிலையில் கடந்த ஒன்பது நாள் விசாரணைக்கு பிறகு சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் சிபிஐ கைது செய்தது போன்று அமலாக்கத்துறையும் கைது செய்யாமல் இருப்பதற்காக ப.சிதம்பரம் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நேற்று முடிவடைந்தது.

மேலும் இவ்வழக்கு தொடர்பாக எழுத்துப் பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

அதன்படி சீலிடப்பட்ட உறையில் அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா வழக்கு விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை இதுவரை 3 முறை விசாரணை நடத்தி உள்ளது குறிப்பிடதக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.