Oviya Blast Thala Thalapathy Fans
Oviya Blast Thala Thalapathy Fans

டுவிட்டரில் அஜித் விஜய் ரசிகர்களை அசிங்கப்படுத்தி ஓவியா பதிலடி கொடுத்துள்ளார்.

Oviya Blast Thala Thalapathy Fans : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஓவியா. களவாணி படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

இவர் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். வாட்ஸ் ஹேப்பெனிங் என்ற பதிவின் மூலம் உரையாட தொடங்கினார்.

அப்போது விஜய் ரசிகர் ஒருவர் தல என்ற பெயரை வைத்து தோனி ரசிகர்களிடம் அஜித் ரசிகர்கள் அடி வாங்கியதாக கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

கல்லூரி விழாவில் பேசிய ஜூலி, கிண்டலடித்த மாணவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி – ஷாக்கிங் வீடியோ.!

அதற்கு ஓவியா போதும் நிறுத்துங்க என்பது போல தக்க பதிலடி கொடுத்திருந்தார். ஓவியாவின் இந்த பதிவை பார்த்த இன்னொரு அஜித் ரசிகர் பதிவு ஒன்றை பதிவிட அதற்கு ஓவியா லூசுங்களா டா நீங்க என கமெண்ட் அடித்துள்ளார்.

அதன் பின்னர் இந்த பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இதன் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் ரசிகர்கள் உங்களுக்கு பாய் ஃபரெண்ட் இருக்கா என கேட்க நான் சிங்கிள் தான் என கூறியுள்ளார். மேலும் திருமணம் எப்போது என கேட்க எனக்கு திருமணம் வேண்டாம் என பதிலளித்துள்ளார்.

டுவிட்டர் பக்கத்தில் யாரையும் பின்பற்றாதே ஏன் என கேட்டதற்கு யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பின்பற்ற விருப்பமில்லை என பதிவிட்டுள்ளார்.