Web Ads

“ஓ…! சுகுமாரி” – திரு வீர் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய ஃபேமிலி எண்டர்டெயினர் அறிவிப்பு

திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி சேரும் கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 2 திரைப்படத்திற்கு “ஓ…! சுகுமாரி” என தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான Pre Wedding Show, Sankranthiki Vasthunnam ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு, இந்த ஜோடி நடிக்கும் புதிய திரைப்படம் குடும்பம், காதல், எமோஷன், கிளைமாக்ஸ் திருப்பங்கள் கொண்ட கதை என படக்குழு தெரிவித்துள்ளது.

அறிமுக இயக்குனர் பரத் தர்ஷன் இயக்கும் இப்படத்தை மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரிக்கிறார். இன்று வெளியிடப்பட்ட டைட்டில் போஸ்டர்—ஆலமரம், மின்னல் குறி, கிராம சூழல்—என அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடிக்கின்றவர்கள்

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜான்சி, விஷ்ணு ஓ லட்டு, ஆமணி, முரளிதர் கவுட், ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம், கவிரெட்டி ஶ்ரீனிவாஸ், சரண்யா.

தொழில்நுட்பக் குழு

தயாரிப்பாளர்: மகேஸ்வரா ரெட்டி மூலி

இயக்குநர்: பரத் தர்ஷன்

ஒளிப்பதிவு: C.H. குஷேந்தர்

இசை: பரத் மஞ்சிராஜு

கலை இயக்குநர்: திருமலா M. திருப்பதி

எடிட்டிங்: ஸ்ரீ வரபிரசாத்

உடை வடிவமைப்பு: அனு ரெட்டி அக்கட்டி

பாடல்கள்: பூர்ணசாரி

பிஆர்ஒ: யுவராஜ்

மார்க்கெட்டிங்: ஹேஷ்டேக் மீடியா

படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. படம் தமிழுடன், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியாக உள்ளது.

“ஓ…! சுகுமாரி” – திரு வீர் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய ஃபேமிலி எண்டர்டெயினர் அறிவிப்பு