OBS visits US with son Ravindrath Kumar!
OBS visits US with son Ravindrath Kumar!

சென்னை: 10 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று காலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் . அவருடன் அவரது மகனும் தேனி தொகுதி எம்பியுமான ரவீந்திராத் குமார், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் உடன் புறப்பட்டு சென்றனர் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த இரு மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் என மூன்று நாடுகளுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் அமைச்சர்களும் உடன் சென்றனர் .

இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று காலை அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் அவரது மகனும் தேனி தொகுதி எம்பியுமான ரவீந்திராத் குமார், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகளும் உடன் புறப்பட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து புறப்படும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல இருக்கிறார். மேலும் நாளை முதல் நவம்பர் 17- ஆம் தேதி வரை அமெரிக்காவில் ஓ. பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மேலும் அமெரிக்காவின் சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் டிசி மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் ஓ.பன்னீர் செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் நவம்பர் 9-ஆம் தேதி சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெறும் குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் துணை முதல்வர் ஓபிஎஸ். அதையடுத்து, நவம்பர் 13 மற்றும் 14-ல் வாஷிங்டன்னில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் துணை முதல்வர் கலந்து கொள்கிறார். அதை தொடர்ந்து நவம்பர் 17 -ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here