Ajith
நேர்கொண்ட பார்வை ரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி அஜித் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.

NKP Shocking Update : தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.

கவின் குறித்து கஸ்தூரி போட்ட ட்வீட், பாவம் அவங்களும் பாதிக்கப்பட்டு இருக்காங்க போல.!

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிறப்பு வேடத்தில் வித்யா பாலன் நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கா ராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார்.

அதன் பின்னர் ஆகஸ்ட் 1-ம் தேதியே படத்தை வெளியிட இருப்பதாக தகவல்கள் கசிந்திருந்தன. ஆனால் அறிவிப்பு எதுவும் வரவில்லை.

நேர்கொண்ட பார்வை படத்தில் இசையில் அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?

இந்நிலையில் தற்போது இப்படத்தை ரிலீசுக்கு முன்பாகவே போனி கபூர் மும்பையில் பிரீமியர் காட்சி ஒன்றை ஒளிபரப்ப உள்ளதாகவும் இதில் அவருடைய குடும்பத்தினர் கலந்து கொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் எங்க தலைய பார்க்க நாங்க காத்துகிட்டு இருக்கோம், ஆனால் உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஷோவா என கடுப்பாகியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.