Nerkonda Paarvai gives important to sound : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja

Nerkonda Paarvai gives important to sound :

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த அதிரடி மாற்றம் – அதிகாரபூர்வமாக அறிவித்த டிவி சேனல்!

இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் ஆக இந்த ட்ரைலர் வெளியானது போல் படமும் சர்ப்ரைசாக முன்கூட்டியே வெளியாக உள்ளதாம்.

அதாவது முன்னதாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட இப்படம் தற்போது ஜூலை 25ம் தேதி அல்லது ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இதன் பின்னணி இசை பணிகளை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா துவங்கிவிட்டார்.

மேலும் பாதி படம் கோர்டில் நடப்பதால் இப்படத்தில் சவுண்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.