நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் குறித்த விவரங்கள் தற்போது கிடைத்துள்ளன.
NKP Second Week Collection Report : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை.
எச். வினோத் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
NKP-க்கு வந்த மோசமான விமர்சனம், ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் பதிலடி- வைரலாகும் புகைப்படம்.!
ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் வசூல் வேட்டை நடத்தி வந்த இப்படத்தின் வசூல் கடந்த வாரத்திலும் அதிகரித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 15 முதல் நேற்று வரை சென்னையில் எவ்வளவு வசூல் என்ற விவரங்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளன.
அவை இதோ உங்களுக்காக
15th – ₹ 64 Lakhs
16th – ₹ 34 Lakhs
17th – ₹ 46 Lakhs
18th – ₹ 51 Lakhs
இந்த நான்கு நாட்களில் மட்டுமே நேர்கொண்ட பார்வை திரைப்படம் சென்னையில் மட்டும் ரூ 1.95 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடம் பிடித்துள்ளது.