NGK Telugu rights sold out
NGK Telugu rights sold out

NGK Telugu rights sold out  – தெலுங்கிலும் தற்போது இப்படம் அதேநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் இப்படத்தை ஸ்ரீ சத்யசாய் ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மீண்டும் ஒரேநாளில் மோதும் அஜித், விஜய் படங்கள் – ரசிகர்களுக்கு செம விருந்து!

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தினம் தினம் ரிசர்வேஷனுக்காக சூர்யாவின் ரசிகர்கள் திரையரங்குகளை படையெடுக்கிறார்களாம்.

இது ஒருபக்கம் இருக்க தெலுங்கிலும் தற்போது இப்படம் அதேநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் இப்படத்தை ஸ்ரீ சத்யசாய் ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.