Ajith Vijay film to clash again
Ajith Vijay film to clash again

Ajith Vijay film to clash again – 2014 ஜில்லா, வீரம் போட்டிக்குப் பிறகு அஜித் விஜய் படங்கள் ஒரேநாளில் திரையில் மோதுகிறது.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அண்மையில் நிறைவுக்கு வந்தது.

அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவார் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இப்படத்தின் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளதாம்.

மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி படம் வெளியாகவுள்ளதாம். தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி விஜய் – லோகேஷ் கனகராஜ் இணையும் புது படமும் இதேநாளில் தான் வெளியாகிறதாம்.

இதன்மூலம் 2014 ஜில்லா, வீரம் போட்டிக்குப் பிறகு அஜித் விஜய் படங்கள் ஒரேநாளில் திரையில் மோதுகிறது.