NGK Movie Updates | Suriya | Sai pallavi | Yuvan Shankar Raja | Rakul Preet Singh | NGk Trailer | Kollywood | Tamil Cinema | Latest Cinema News

NGK Movie Updates :

மெர்சல், 2.O படத்திற்கு பிறகு NGK-விற்கு மட்டுமே நடக்கும் ஸ்பெஷல் – ரசிகர்களை கொண்டாட வைத்த ட்வீட்.!

மெர்சல், 2.O படத்திற்கு பிறகு NGK படத்திற்கு கிடைத்த பெருமையால் ரசிகர்கள் உற்சாகமடைந்த வருகின்றனர்.

அடித்தது யோகம்.. ஹாலிவுட் ரீமேக்கில் விமல் – ஹீரோயின் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா முதல் முறையாக செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் NGK.

வரும் வெள்ளிக்கிழமை அதாவது மே 31-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

தமிழகத்தை தாண்டி கேரளா, ஆந்திரா என பல இடங்களில் கட் அவுட், பேனர், பிளக்ஸ் என படத்தின் ரிலீஸ் களைகட்ட தொடங்கியுள்ளது.

இந்த கொண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பாரிசில் உள்ள Le Grand Rex சினிமாவிலும் NGK திரைப்படம் ரிலீசாக உள்ளதாம்.

இந்த திரையரங்கில் மெர்சல், 2.O, பாகுபலி 2 என ஒரு சில தமிழ் படங்களே ரிலீசாகி உள்ளன. அந்த வரிசையில் தற்போது NGK திரைப்படமும் இணைந்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.