Netri Kann Movie Remake
நெற்றிக் கண் ரீமேக்கில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Netri Kann Movie Remake : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் இறுதியாக பட்டாஸ் திரைப்படம் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது.

இந்த நிலையில் தனுஷ் ரஜினி நடிப்பில் 30 வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற நெற்றிக்கண் என்ற படத்தை ரீமேக் செய்து நடிக்க விரும்புவதாக கூறி இருந்தார்.

போச்சா… ஓவர் ஒல்லியானதால் கீர்த்தி சுரேஷுக்கு வந்த சோதனை.!

இதனையடுத்து தற்போது இந்த நெற்றிக்கண் ரீமேக் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.

ஏற்கனவே தொடரி படத்தில் தனுஷும் கீர்த்தி சுரேஷும் இணைந்து நடித்திருந்தனர், ஆனால் இப்படத்தில் இவர்களின் ஜோடி கிண்டலுக்கு உள்ளானதும் குறிப்பிடத்தக்கது.

நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மேனகா சுரேஷ் நடித்திருந்த நிலையில் இரண்டாம் ரீமேக்கில் அவருடைய மகள் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுவது படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.