Keerthy-Suresh
ஓவர் ஒல்லியானதால் கீர்த்தி சுரேஷ் ஆசையாய் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வாய்ப்பை இழந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக இடம் பிடித்த இவர் பாலிவுட்டில் அஜய் தேவ்கன்னுடன் இணைந்து படம் ஒன்றில் நடிக்க இருந்தார்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் அம்மா வேடத்தில் நடிக்க இருந்தார், ஆனால் தற்போது உடல் எடையை குறைத்து ஓவர் ஒல்லியாகி விட்டதால் யங் லுக்கில் தெரிகிறார்.

இதனால் அம்மா வேடம் செட்டாகாது என இந்த கதாபாத்திரத்தில் இருந்து கீர்த்தி சுரேஷை தூக்கி விட்டு பருத்திவீரன் புகழ் ப்ரியாமணியை ஒப்பந்தம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.