விஜயகாந்துக்கு நினைவஞ்சலி செலுத்த, விஜய் ஏன் வரவில்லை?: வைரலாகும் விமர்சனங்கள்..

கேப்டன் குரு பூஜைக்கு விஜய் வராததால், கடும் விமர்சனங்கள் பெருகி வருகிறது. இது பற்றிய விவரம் காண்போம்..
கேப்டன் விஜயகாந்த் குரு பூஜைக்கு விஜய் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. முன்னதாக, விஜய்காந்த்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் பிரேமலதா விஜயகாந்த்தின் சகோதரர் சுதீஷ் என இருவரும் நேரில் சென்று விஜய்க்கு அழைப்பிதழ் வழங்கினர். இந்தச் சந்திப்பின்போது விஜய் வருவதாக உறுதி அளித்துள்ளார்.
இச்சூழலில், விஜய் வராதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேரில் வரமுடியாத நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் விஜயகாந்த் நினைவு நாளுக்கு நினைவஞ்சலி செலுத்துவதாக, தங்களது வலைதளப் பக்கங்களில் பதிவிட்டனர். ஆனால், விஜய் அதுவும் செய்யவில்லை. இதனால், கேப்டன் ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் விஜய்யை விமர்சித்து வருகின்றனர்.
‘விஜயகாந்த் நினைவு நாள் குறித்து, வலைதளங்களில் கூட எதுவும் பதிவிடவில்லை. ஆனால், கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு கோவாவுக்கே சென்று வாழ்த்துகள் தெரிவிக்கின்றார்.
அதேபோல், கீர்த்தி சுரேஷ் இந்தியில் அறிமுகமான ‘பேபி ஜான்’ படத்தின் ரிலீஸ்க்கு வாழ்த்து தெரிவிக்கின்றார். ஆனால், கேப்டனுக்காக ஒரு பதிவுகூட அவர் போடவில்லை’ எனவும் கடுமையாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விமர்சனங்களுக்கு விஜய் ரசிகர்களும், தவெகவினரும் காவல் துறை அனுமதி கொடுக்கவில்லை. அதனால்தான், விஜய் வரவில்லை. மேலும், கேப்டன் குடும்பத்தினரை தனிப்பட்ட முறையில் விஜய் போன் செய்து பேசியதாகவும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்த சர்ச்சைகளுக்கு விஜய்யின் பதிலை திரை ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
