ஈஸ்வரியை மிரட்டிய பாக்யா, ராதிகா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
ஈஸ்வரியை பாக்யா மிரட்டியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவை வந்து பார்க்க அவர் தனியாக கீழே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.ராதிகா வீடு காலி பண்ண வேண்டான்னு சொன்னேன்ல எதுக்கு இப்படி பண்ண என்று கேட்கிறார். உடனே ராதிகா நான் உங்ககிட்ட பேசினாவே பிரச்சினை தான் வருது இப்போ உன்கிட்ட பேசணும்னு நினைக்கிறது எதுவுமே பேச முடியல என்று சொல்லுகிறார்.
கோபி அதெல்லாம் ஒன்னும் இல்ல உனக்கு என்ன பேசணும்னு தோணுதோ பேசு என்று சொல்லுகிறார். மறுபக்கம் கோபியை அனுப்பியது பாக்கியா என்பதால் ஈஸ்வரி பாக்யாவை பார்த்து முறைத்துக் கொண்டே இருக்கிறார். கோபி ராதிகாவிடம் எனக்கு இது மாதிரி உடம்பு சரியாமல் போன அதனால அம்மா ரொம்ப பயந்துட்டாங்க இப்பதான் அப்பா இறந்துட்டாரு எனக்கு எதுவும் ஆயிடக்கூடாதுன்னு அப்படி பேசி இருப்பாங்க கொஞ்சம் பொறுத்துக்கோ ராதிகா என்று சொல்லுகிறார்.
எதை கோபி பொறுத்துக்கணும் உங்க வீட்ல இருக்கிறவங்க எல்லாரும் உங்களுக்கு உடம்பு சரி இல்லாம போனதுக்கு காரணம் நான் தானே சொன்னாங்க அதையும் பொறுத்துக்கிட்டேன் உங்க வீட்டுக்கு வரும்போது எல்லாம் என்ன அசிங்கப்படுத்தினாங்க உங்க பொண்ணு இனியா எங்க டாடி வாழ்க்கைல நீங்க வராமலே இருந்திருக்கலாம் என்று சொன்னா அதையும் பொறுத்துக்கிட்டேன். உங்கள பாக்க வரும்போது அந்த பத்து நிமிஷமோ நீங்க உங்க குடும்பத்த பத்தி தான் பேசினீங்க அதையும் பொறுத்துக்கிட்டேன். உங்க அம்மா என்ன டைவர்ஸ் பண்ணிட்டு போக சொன்னாங்க அதையும் பொறுத்துக்கிட்ட, மயூ அவ பொறந்த நாளைக்கு உங்கள பாக்க வாசலிலேயே காத்துக்கிட்டு இருந்தா அதையும் பொறுத்துக்கிட்ட, என்னோட பொண்ணு மட்டும் ஏன் அன்புக்கு ஏங்கிக்கிட்டே இருக்கணும் அவளுக்கு ஏன் நான் இந்த கஷ்டத்தை கொடுக்கணும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
உடனே ஈஸ்வரி கோபி இன்னும் வரவில்லை என்று சொல்ல இனியா நான் போய் கூட்டிட்டு வரேன் ஒன்று போக பாக்யா உன் வேலையை மட்டும் பாரு ராதிகா வீட்டுக்கு போனேன்னா அவ்வளவுதான் நின்று மிரட்டுகிறார். மறுபக்கம் கோபி இது எல்லாமே எனக்கு புரியுது ராதிகா அதுக்காக வீடு காலி பண்ணிட்டு போயிட்டா எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடுமா தயவுசெய்து வேண்டாம் என்று கெஞ்சி கேட்கிறார். நான் அம்மாகிட்ட எனக்கு உடம்பு சரி ஆயிடுச்சின்னு சொல்லிட்டு நான் வந்துடறேன் உன் கூடையும் மயூ கூடவும் நான் இருக்கேன் என்று சொல்லி கெஞ்சுகிறார்.
ஈஸ்வரி பாக்யாவிடம் நாங்க ஊருக்கு போனதுக்கு அப்புறம் ராதிகாவும் நீயும் சேர்ந்து திட்டம் போட்டிங்களா என்று சண்டை போடுகிறார் அவன் போயிட்டு வரமாட்டான் தானே என்று கேட்க எனக்கு என்ன தெரியும் என்று பாக்கியா கேட்கிறார். அவன் எனக்கு கோயில்ல வச்சு சத்தியம் பண்ணி கொடுத்தான் இனிமே நான் உங்களை விட்டு போக மாட்டமா என்று ஈஸ்வரி சொல்ல அவர் ஒன்னும் குழந்தை கிடையாது அவருக்கு குடும்பம் இருக்கு என்று பாக்யா சொல்லுகிறார். உடனே ஈஸ்வரி நம்ம தான் அவனோட குடும்பம் என்று சொல்ல அப்படி சொல்லாதீங்க நீங்க வேணா சொல்லிக்கோங்க என்று சொல்லி விடுகிறார். நானும் கார்ல வரும்போது நீ பாக்யா கூட சேர்ந்து வாழணும்னு சொன்ன அவனும் எதுவும் பேசல அவனுக்கு உன் கூட சேர்ந்து வாழவேண்டும் அடி மனசுல ஆசை இருக்கு பாக்கியா என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சியாகி நிற்கிறார்.
ராதிகாவின் கையைப் பிடித்து பாக்யா சொல்லனா எனக்கு இப்ப கூட தெரிஞ்சி இருக்காது என்று சொல்ல ராதிகா கோபியின் கையில் இருந்து கையை எடுத்து இப்ப கூட பாக்யா சொல்லித்தான் நீங்க வந்து இருக்கீங்க உங்களுக்கு தோணல என்று சொல்லுகிறார்.
உங்க பையன் கூட சேர்ந்து வாழ்வேன்னு நீங்க கனவுல கூட நினைக்காதீங்க. அவர் என்னைக்கி என் கூட இருந்துகிட்டு இன்னொரு பொண்ணு கூட வாழ்ந்து கிட்டு இருந்தாரோ அன்னைக்கே நான் அவர என் மனசுல இருந்து தூக்கிப் போட்டுட்டேன் என்று கோபமாக பேசுகிறார். அதற்கு ஈஸ்வரி உன் பசங்களோட வாழ்க்கையை யோசித்து பார்த்தியா என்று சொல்ல அவர் விட்டுட்டு போன அன்னைலிருந்து என் பசங்களோட வாழ்க்கையை நான் பாத்துட்டு தான் இருக்கேன் அவர் ஒரு அயோக்கியன், துரோகி என்று சொல்ல ஈஸ்வரி பாக்யாவை அதட்டுகிறார். உங்களுக்கு உங்க பையன் பாசம் வேணா கண்ண மறைக்கலாம் ஆனா என்ன பொறுத்த வரைக்கும் அவர் ஒரு அயோக்கியன் தான் அவர் கூட வாழவேன் நீங்க நினைக்கிறது மிகப்பெரிய தப்பு. எனக்கென சுயமரியாதையா இருக்கு அத சீண்டி பாக்காதீங்க நான் மனுஷியாக இருக்க மாட்டேன் என்று மிரட்டி விட்டு சென்று விடுகிறார்.
கோபி ராதிகாவிடம் என்ன சொல்லுகிறார்? அதற்கு ராதிகாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.