Nayanthara Issue

Nayanthara Poster : நயன்தாரா – ராதா ரவி சர்ச்சையை வைத்து நயன்தாரா ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நடிப்பில் நாளை உலகம் முழுவதும் ஐரா என்ற திரைப்படம் ரிலீசாக உள்ளது.

என்னை கண்டதும் அஜித்? மேடையில் நடித்தே காட்டிய நடிகர் – விடியோவுடன் இதோ.!

மேலும் இவரது நடிப்பில் கொலையுதிர் காலம் என்ற திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. சமீபத்தில் நடந்த இப்படத்தின் நிகழ்ச்சியில் நடிகர் ராதா ரவி நயன்தாராவை இழிவாக பேசி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பலரும் ராதா ரவிக்கு எதிராக கண்டனங்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா ரசிகர்கள் தமிழக அரசே, காவல் துறையே, நடிகர் சங்கமே நடவடிக்கை எடு. நயன்தாராவையும் பெண்களையும் இழிவாக பேசி விளம்பரம் தேடும் நலிந்த நடிகர் ராதா ரவியை வன்மையாக கண்டிக்கிறோம் என போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை கிளைமேக்ஸ், அஜித் எடுத்த ரிஸ்க்.!

நயன்தாரா ரசிகர்களின் இந்த செயலுக்கு அவரது ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். அதே சமயம் பொள்ளாச்சி கொடூரம் போன்ற பிரச்சனைகளின் போதெல்லாம் நீங்கள் எங்கே இருந்தீர்கள்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Nayanthara Poster

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.