நாக சைதன்யா-சோபிதாவுக்கு நடந்த திருமணம்: மகிழ்வான நிகழ்வுகள்..

சமந்தாவுடன் நிகழ்ந்த பிரிவுக்கு பிறகு, நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். இருவரது காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்து, நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ‘இனி, சோபிதாவுடன் ஓர் அற்புத வாழ்க்கை தொடரும்’ என நாகா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்நிலையில், அறிவித்தபடி நேற்று ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் திருமணம் நடந்தது. இதில், இருவீட்டாரும் உறவினர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
பொதுவாக திருமணம் காலையில் நடக்கும். ஆனால், இவர்களது திருமணமோ நேற்றிரவு 8 மணிக்கு நடைபெற்றது. நாகேஸ்வர ராவின் சிலைக்கு முன்பு சோபிதா துலிபாலாவுக்கு, நாக சைதன்யா தாலி கட்டினார். அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகிறார்கள்.
அவர்களின் திருமண புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சூழலில், வீடியோ ஒன்று தற்போது மேலும் டிரைண்ட் ஆகியிருக்கிறது.
அதாவது, மேடையில் நாக சைதன்யா சோபிதாவின் கழுத்தில் தாலி கட்டும்போது, அவரின் தம்பி அகில் சத்தமாக விசில் அடிக்கிறார். அது, மேடையில் இருப்பவர்களை மேற்கொண்டும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நாக சைதன்யாவின் தம்பி அகிலுக்கும் அடுத்த வருடம் திருமணம் நடக்கவ இருக்கிறது. சமீபத்தில்தான் நிச்சயதார்த்தம் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இருமனம் ஒருமனமாகி, இல்லறம் நறுமணமாக வாழ்த்துவோமே.!
