புஷ்பா-2 படம் எப்படி?: திரை ஆர்வலர்களின் கருத்துகள்..
‘புஷ்பா’ பட மெகா ஹிட்டை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி, இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. படத்தை பார்த்த திரை ஆர்வலர்கள் அவரவர் பார்வையில், இணையவெளியில் தெரிவித்துள்ள கருத்துகள் இதோ..
* அல்லு அர்ஜுன் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவர், பகத் பாசிலுடன் மோதும் காட்சிகளும் அருமை.
* படத்தில் பீலிங்ஸ் பாடல் காட்சிகள் ரசிக்கத் தக்கவை. இதேபோல, கிஸ்ஸிக் பாடலும் சிறப்பு. கிளைமாக்ஸ் மற்றும் அறிமுக ஜப்பான் சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கிறது.
* அல்லு அர்ஜுன் நடிப்பு செம மிரட்டல். மீண்டும் விருது பெறுவார். புஷ்பா 2 படத்தை ஒரே வார்த்தையில் விமர்சிக்க வேண்டும் என்றால், அது மெகா பிளாக்பஸ்டர்.
* இந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த படம் புஷ்பா 2 என அறிவிப்பு வரும் என்பதில் சந்தேகமே இல்லை. பாக்ஸ் ஆபீஸில் புயலை கிளப்ப வந்திருக்கிறது புஷ்பா 2.
* இயக்குநர் சுகுமாரின் மேஜிக் பெரிய திரையில் தெரிகிறது. ஆக்சன் காட்சிகளை பார்த்தால் இருக்கிறது. படம் பார்த்து நேரம் போவதே தெரியவில்லை.
* பகத் பாசில் வெறித்தனமாக நடித்திருக்கிறார். அந்த மனுஷன் நடிப்பை பற்றி சொல்லவா வேண்டும். பி.ஜி.எம். மாஸாக உள்ளது. அல்லு அர்ஜுனின் அறிமுக காட்சி மிரட்டலாக இருக்கிறது. ரஷ்மிகா மந்தனா பெயருக்கு தான் ஹீரோயினாக இருக்கிறார்.
* இது அல்லு அர்ஜுனின் ஒன் மேன் ஷோ. புஷ்பாவை போன்றே இரண்டாம் பாகமும் சூப்பராக இருக்கிறது.
* அல்லு அர்ஜுனும், பகத் பாசிலும் தான் கவர்கிறார்கள். சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை படத்திற்கு வலிமை. ராஷ்மிகா இந்தப் படத்தில் வித்தியாசமான நடிப்பை கொடுத்துள்ளார்.
* கணவன் மனைவியாக அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு கவர்கிறது. புஷ்பா முதல் பாகத்தை விட, 2-ம் பாகம் வசீகரிக்கிறது. மெகா கலெக்ஷனை குவிக்கும் என நம்பலாம்.
இவ்வாறு, புஷ்பா-2 படத்திற்கான பப்ளிக் ரிவ்யூ தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
![allu arjun rashmika mandanna starrer pushpa 2 twitter review](https://kalakkalcinema.com/wp-content/uploads/2024/12/pushpa22-1.avif)