இந்த வாரம் டிஆர்பியில் இடம் பிடித்த டாப் 10 சீரியல்கள்..! உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது? கமெண்ட் பண்ணுங்க..!
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். வார வாரம் டாப் 10 இடத்தை சீரியல்கள் பிடித்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தொடர்ந்து முதலிடத்தில் இருந்த கயல் சீரியலை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் மூன்று முடிச்சு உள்ளது.இரண்டாவது இடத்தில் வழக்கம் போல் சிங்க பெண்ணே சீரியலும் மூன்றாவது இடத்தில் கயல் சீரியலும் உள்ளது.
நான்காவது இடத்தில் சுந்தரியும்,ஐந்தாவது இடத்தில் மருமகள் சீரியலும், ஆறாவது இடத்தில் ராமாயணம் சீரியல் இடம் பெற்றுள்ளது.
ஏழாவது இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியலும் எட்டாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 ஒன்பதாவது இடத்தில் பாக்கியலட்சுமி பத்தாவது இடத்தில் ஆஹா கல்யாணம் சீரியல் இடம் பிடித்துள்ளது.
முதல் ஆறு இடங்களை சன் டிவி சீரியலும் அடுத்த நான்கு இடங்களை விஜய் டிவி சீரியலும் பிடித்துள்ளது. இந்தப் பத்து சீரியலில் உங்களுடைய பேவரைட் சீரியல் எது? நீங்கள் எந்த சீரியலை தொடர்ந்து பார்க்கிறீர்கள் என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.