கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி டிஆர்பி யில் முதல் இடத்தை பிடித்த மூன்று முடிச்சு.முழு விவரம் இதோ..!
டிஆர்பி யில் முதலிடத்தை பிடித்துள்ளது மூன்று முடிச்சு.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.
சூர்யா நந்தினியை திருமணம் செய்த பிறகு சுந்தரவல்லி குடும்பத்தினர் செய்யும் டார்ச்சரை சகித்துக் கொண்டு நந்தினி எப்படி வாழப் போகிறார் என்ற கதை களத்துடன் சீரியல் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
சீரியல் தொடங்கிய நாளிலிருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது டிஆர்பியிலும் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே வந்தது.
சமீபத்தில் தொடர்ந்து வெளியான முதலிடத்தில் பிடித்து வந்த கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி 10.45 புள்ளிகளுடன் மூன்று முடிச்சு முதலிடத்தை பிடித்துள்ளது.