இந்த வாரம், ஓடிடி.யில் ரிலீஸாகும் திரைப்படங்கள் லிஸ்ட்..
வீட்டுக்குள் ஒரு மினி தியேட்டர் என்றால் அது ஓடிடி தான். இதில், சுதந்திரமாக படம் காண்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வகையில், இந்த வாரம் ரிலீஸாகும் படங்கள் இதோ..
அமரன்: இந்தாண்டு தீபாவளி ரிலீசாக வெளியானது ‘அமரன்’. சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பினை பெற்றது.
மறைந்த மேஜர் முகுந்தாக எஸ்கேவும், இந்து ரெபக்கா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்த இப்படத்திற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பல தரப்பில் இருந்தும் பாராட்டுகளை குவித்தது. பாக்ஸ் ஆபீஸில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இப்படம், திரையரங்குகளில் வரவேற்பை பெற்றதை போல், ஓடிடியிலும் மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்: வெற்றிமாறன் தயாரிப்பில், விமல் நடிப்பில் வெளியான இப்படத்தினை போஸ் வெங்கட் இயக்கியிருந்தார். ‘சார்’ படம் பலரின் பாராட்டுகளை பெற்றதோடு, விமர்சனரீதியாகவும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அமேசான் பிரைம் தளத்தில் பார்க்கலாம்.
இந்த வாரம், தமிழ் படங்கள் இரண்டு மட்டுமே ஓடிடியில் ரிலீசாகும் நிலையில், தெலுங்கு படமான ‘MATKA’ தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அமேசான் ப்ரைம் தளத்தில் ரிலீஸ் ஆகிறது.
க்ரைம், ஆக்சன், திரில்லர் ஜானரில் வெளியாகி இப்படம் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது. இனி, வேறென்ன ஓடிடி.யில் குடும்பத்துடன் ரசிப்போம்.. சுதந்திரமாய் குதூகலிப்போம்.!