Pushpa 2

(ரஜினி) அண்ணனின் பிறந்த நாளில், (கீர்த்தி சுரேஷ்) தங்கச்சிக்கு திருமணம்: அழைப்பிதழ் விவரம்..

‘காதல் வந்ததும் கன்னியின் உள்ளம், காதலை யாருக்கும் சொல்வதில்லை..’ என்ற பாட்டு வரிகளுக்கு ஏற்ப சமீபத்தில் தான் திருவாய் மலர்ந்து அனைவருக்கும் தனது காதலை தெரியப்படுத்தி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

தற்போது, கீர்த்தியின் இத்தகைய காதல் பயணம், திருமண பத்திரிகை வரை வந்து வைரலாகி தெறிக்கிறது. இது குறித்து வாசிப்போம்..

கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் குடும்பத்தினர் திருமணத்திற்கான பணிகளில் பரபரப்பாக இறங்கி உள்ளனர். தீவிரமாக திருமண பத்திரிக்கை விநியோகம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது திருமண அழைப்பிதழ் ஊடகங்களில் கசிந்துள்ளது.

மிகவும் எளிமையாக இருக்கும் இந்த அழைப்பிதழில், கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமணம் டிசம்பர் 12-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழில் கீர்த்தி சுரேஷின் பெற்றோரான ஜி. சுரேஷ் குமார் மற்றும் மேனகா சுரேஷ் ஆகியோரின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது.

கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தபோது, ‘டிசம்பர் மாதம் தனக்கு திருமணம் நடைபெற உள்ளது நிஜம் தான், கோவாவில் திருமணம் நடக்கிறது என முதல் முறையாக அதிகாரப் பூர்வமாக கூறினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று தான் கீர்த்தியின் திருமணம் நடைபெற உள்ளது. கீர்த்தி தன்னுடைய பால்ய நண்பரான, துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டிலை தான் மணக்க உள்ளார். அவர் கொச்சியிலும் சில ரெஸ்டாரன்டுகளை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த கீர்த்தி சுரேஷ்க்கு, அந்த அண்ணனின் அகவை நாளில் நடைபெறும் கல்யாணம் சிறப்புற வாழ்த்துவோமே.! அது சரி.. அண்ணனை அழைத்தீர்களா?

keerthy suresh and antony thattil wedding card
keerthy suresh and antony thattil wedding card