Web Ad 2

‘ப்ளீஸ்.. லிஸ்ட் டெல்க’ : திரிஷாவின் வருத்தம் புரிந்து, ரசிகர்கள் அன்புக் கோரிக்கை..

‘எனக்கு ஒரு நாள் விடுமுறை வருகிறது என்றால், நான் யார்கிட்டேயும் அதை சொல்லவே மாட்டேன்’ என கூறியிருக்கிறார் ‘என்றும் டீன்ஏஜ் குயின்’ திரிஷா. இது குறித்த சமாச்சாரம் பார்ப்போம்..

பொதுவாக, சினிமாவில் 30 வயதை தொட்டுவிட்டால் ஹீரோயினாக நிலைப்பது கடினம் என சொல்வார்கள். ஆனால், 41 வயதில் கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார் த்ரிஷா.

அஜித், விஜய், சூர்யா, சிம்பு என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.அதிலும் அஜித்துடன் இரண்டு படங்களில் நடிக்கிறார்.

திரிஷாவின் திரைப்பயண கிராஃப் உச்சத்தை தொட்டிருப்பதில், அவரை விட அவரின் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

கை நிறைய படங்கள் வைத்து செம பிசியாக இருப்பதால், நேரம் கிடைக்கும்போது எல்லாம் தன் தோழிகளுடன் எங்கேயாவது பயணம் செல்கிறார்.

படங்கள், பயணம் என எப்பொழுதும் பிசியாக இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார் த்ரிஷா. அடிக்கடி போஸ்ட் போடாவிட்டாலும், ஸ்டோரி போட்டு வருகிறார். இன்று இன்ஸ்டா ஸ்டோரியில் திரிஷா என்ன சொல்லியிருக்கிறார் என்பதை பார்க்க பலரும் ஆர்வமாக உள்ளனர்.

அந்நிலையில், தற்போது இன்ஸ்டா ஸ்டோரியில் திரிஷா சொன்ன விஷயம் ரசிகர்களை குழப்பம் அடைய செய்துள்ளது. அதாவது,

‘உங்களுக்கு ஒரு நாள் விடுப்பு கிடைத்தால், அதை யாரிடமும் சொல்லாதீர்கள். ஒருவரிடம் கூட சொல்லாதீர்கள்’ என தெரிவித்துள்ளார்.

லீவ் கிடைத்தால் முதலில் நண்பர்களிடம் தானே சொல்வோம். அவர்களுடன் தானே நேரம் செலவிட ஆசைப்பட்டு சொல்வோம். ஆனால், யாரிடமும் சொல்லாதேனு திரிஷா ஏன் சொல்கிறார்? என புரியவில்லையே’ என்கிறார்கள் ரசிகர்கள்.

‘தலைவி சொன்னால் ஏதாவது காரணம் இருக்கும். இந்த அறிவுரைக்கான பதிலையும் ஓர் நாள் அவரே சொல்வார். அதுவரை காத்திருப்போம் என்கிறார்கள் திரிஷா ரசிகர்கள்.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 45 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் திரிஷா. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படம் கசிந்து வைரலாகி விட்டது. அதில் த்ரிஷாவை பார்த்தவர்களோ, இவங்களுக்கு வயசே ஆகாது போலயே என்கிறார்கள்.

விஜய், அஜித் ஆகியோருக்கு மட்டும் அல்ல, சூர்யாவுக்கும் ராசியான ஹீரோயின்களில் ஒருவர் த்ரிஷா. அதனால் சூர்யா 45 படத்திற்கு திரிஷா. மேஜிக், கை கொடுக்கும் என நம்பப்படுகிறது.

முன்னதாக, திரிஷாவிடம் ரசிகர்கள் கேட்கும் முக்கிய கேள்வி, ‘ இதற்கு முன் கிடைத்த விடுமுறையை யாரிடமெல்லாம் கூறினார்கள்? ப்ளீஸ் லிஸ்ட் டெல்க..!’ என்பது தான். திரிஷா விரைவில் டெல்வாரா.? பார்க்கலாம்..

never tell anyone trisha krishnans insta storygets attention
never tell anyone trisha krishnans insta storygets attention