Pushpa 2

நாக சைதன்யா-சோபிதா நட்சத்திர ஜோடி ஹனிமூன்: எங்கே தெரியுமா?

சோபிதா விரும்பிய இடத்திற்கு, நாக சைதன்யா அவருடன் ஹனிமூன் கொண்டாட அழைத்துச் செல்கிறார். இது பற்றிய சமாச்சாரம் பார்ப்போம்..

நடிகர் நாக சைதன்யாவுடன் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ஜோடியாக நடித்து, சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. இவர், தனது முதல் பட ஹீரோவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக, கடந்த 2017-ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான கையோடு இருவரும் நியூயார்க் நகரத்துக்கு ஹனிமூனுக்காக சென்றனர். சந்தோஷமாக சமந்தாவும் நாக சைதன்யாவும் வாழ்ந்த நிலையில், திடீரென ஏற்பட்ட பிளவு காரணமாக 2021-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

பின்னர் நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை காதலித்து, இரு வீட்டாரின் சம்மதம் பெற்று, கடந்த டிசம்பர் 4-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இச்சூழலில், தற்போது இருவரும் ஹனிமூனுக்கு எங்கே செல்லப் போகின்றனர் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக சோபிதா கூறுகையில், ‘தன்னிடம் கனிவு காட்டும் நபர் தனக்கு கணவராக வரவேண்டும். அதே போல ஹனிமூனுக்கு ஐஸ்லாந்துக்கு செல்ல வேண்டும்’ என்கிற ஆசையை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், சோபிதா விருப்பப்பட்ட இடத்துக்குத்தான் நாக சைதன்யா அவரை ஹனிமூனுக்கு அழைத்துச் செல்வார் என்றும், இருவரும் சீக்கிரமே குழந்தை பெற்றுக் கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் டோலிவுட் வட்டாரம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘இருமனம் ஒருமனமானால், என்றும் இல்லறம் நறுமணமாகும்’ என்பது நிதர்சனம்.!

naga chaitanya and sobhita dhulipala honeymoon
naga chaitanya and sobhita dhulipala honeymoon