2-ம் ஆண்டு திருமண நாள்: மாலத்தீவில், நடிகை ஹன்சிகா செம கொண்டாட்டம்..
நடிகை ஹன்சிகாவின் மாலத்தீவு கொண்டாட்டம் தொடர்பாக, ரசிகர்கள் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி தெறிக்கிறது. இது குறித்த தகவல் பார்ப்போம்..
நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது இரண்டாம் ஆண்டு திருமண நாளை கணவர் சோஹைல் கதுரியாவுடன் மிகவும் ரொமாண்டிக்காகக் கொண்டாடினார்.
மாலத்தீவுக்குச் சென்றுள்ள நடிகை ஹன்சிகா, கடற்கரையில் மகிழ்ந்து, தனது காதலருடன் எடுத்த அழகிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். அங்கேயே தனது ஆண்டு விழாவைக் கொண்டாடினார்.
நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயணத்தின் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார். அவர் சோஹைலை இந்தப் பதிவில் டேக் செய்துள்ளார்.
இருவரும் கைகோர்த்து கடற்கரையில் மகிழ்வது போன்ற புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘The island life’ என்று தலைப்பிட்டுள்ளார்.
இந்த ரொமாண்டிக் தீவில் நடிகை ஸ்கர்ட் மற்றும் கிராப் டாப், பேன்ட், லெப்பர்ட் பிரிண்ட் ப்ரேசர், ஷ்ரக், கவுன், டெனிம் ஷார்ட்ஸ் மற்றும் கருப்பு கிராப் டாப் அணிந்துள்ள புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக சீரியலில் அறிமுகமான நடிகை ஹன்சிகா பின்னர், டீன் பருவத்தில்
அல்லு அர்ஜுன் நடித்த ‘தேசமுதுரு’ படத்தின் மூலம் நாயகியாகி தெலுங்கு சினியில் இன்றுவரை முன்னணி நடிகையாகத் தொடர்கிறார்.
தமிழ் சினிமாவில், ஹன்சிகாவுக்கு தற்போது 3 படங்கள் உள்ளன. அவை, ரவுடி பேபி, மேன், காந்தாரி ஆகும். இந்தப் படங்கள் அடுத்த ஆண்டு வெளியாக இருப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
இச்சூழலில், மாலத்தீவில் பூரித்திருக்கும் ஹன்சிகாவுக்கு நெட்டிசன்கள் ‘கவனம் பால் நிலவே.. உண்டானாலும் குண்டாகிடாதீங்க, அடுத்தடுத்து வருகிற படங்கள் முக்கியம்’ என தெரிவித்து மருகுவது வைரலாகி வருகிறது.