Mr.Local
Mr.Local

Mr.Local : எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல்.

இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஹிப் ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

அஜித் ஸ்டைலில் பைக் ரேஸராக நடிக்கும் சிவகார்த்திகேயன் – எந்த படத்தில் தெரியுமா?

முன்னதாக இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் காரணம் ஏதும் சொல்லாமல் மே 17-ம் தேதிக்கு இப்படம் தள்ளிபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் படத்தின் ரஷ் பார்த்த சிவகார்த்திகேயன் சில இடங்களில் காமெடியை சேர்க்க சொல்லி கேட்டதன் பேரில் தற்போது ரீ ஷூட் நடந்து வருவதாக நாம் சொல்லியிருந்தோம்.

இதனால் மிஸ்டர் லோக்கல் மீண்டும் தள்ளிபோகும் என ஒரு செய்தி வைரலாக பரவியது. ஆனால் இந்த தகவலை இயக்குனர் ராஜேஷ் தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும் இந்தமுறை படம் சொன்ன நேரத்தில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.