Pushpa 2

திருடு போன தாலி செயின், சூர்யா எடுக்கப் போகும் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 05-01-25
moondru mudichu serial today promo update 05-01-25

நேற்றைய எபிசோடில் நந்தினிக்கு தாலி வாங்க அனைவரும் கடைக்கு வர சுந்தரவள்ளியும் அதே கடைக்கு வந்து இறங்குகிறார். நந்தினி விஜி அக்கா வரட்டும் என்று சொல்ல அருணாச்சலம் விஜி வர முடியாது என்று காரணத்தை சொல்ல, சரி வா நாம் இருக்கேன் எல்லாம் பார்க்கலாம் என்று சூர்யா கூப்பிட்டு அழைத்து செல்கிறார். மாதவி நகைகளை வியந்து பார்த்துக் கொண்டிருக்க அசோகன் வாங்கவிடாமல் சும்மா தான் பார்க்க வந்தோம் என்று சொல்லி சமாளித்து பேசி அங்கிருந்து மாதவியை அழைத்து சென்று விடுகிறார்.

நந்தினி செயின்களை பார்க்க இது எத்தனை பவுன் என்று கேட்கிறார். மூணு பவுன் இருக்கும் என்று சொல்ல இதைவிட கம்மியா இருந்தா கொடுங்க என்று சொல்ல தாளிச் செயின் அஞ்சு பவுன் இருந்தா தான் கரெக்டா இருக்கும் அதோட கம்மியா இருந்தா வெயிட் தாங்காது என்று சொல்ல பரவால்ல காமிங்க என்று நந்தினி சொல்லிவிட்டு ஒரு மெலிசான செய்னை எடுக்க இது அருந்துரும் மேடம் சீக்கிரமா என்று சொல்லுகிறார். உடனே சூர்யா பார்த்துவிட்டு இது என்ன ரொம்ப மெலிஞ்சிருக்கு. என்று சொல்லிவிட்டு ஒரு ஏழு ஒம்போது பவுன்ல செயின் எடுங்க என்று சொல்லுகிறார். அவ்வளவு எல்லாம் வேணாம் சார் என்று சொல்ல எங்க அப்பா சொன்னதை நான் செய்யுற நீ இதுல இருந்து எடு என்று சொல்லி வற்புறுத்துகிறார்.

மறுபக்கம் மாதவி மற்றும் சுரேகா நகைகளை பார்த்துக் கொண்டிருக்க சுரேகா எனக்கு ஒரு ஐடியா தோணுது நம்ம வீட்ல நகை திருடு போனதுக்கு அப்புறம் நம்ம கிட்ட பெருசா நகையெல்லாம் இல்ல, அதனால அம்மா இல்லாத நேரமா அப்பா தனியா தான் இருக்காரு அதனால செண்டிமெண்டா பேசி அப்பா கிட்ட இருந்து நகை வாங்கிடலாமா என்று சொல்ல உடனே மாதவி நீங்க ரெண்டு பேரும் போய் ஒரு கிராம் மட்டும் வாங்க பர்மிஷன் வாங்கிட்டு வாங்க பார்க்கலாம் என்று சொல்லி அனுப்ப, இருவரையும் நிற்க வைத்து அருணாச்சலம் பேசி திட்டி அனுப்ப மாதவி சிரிக்கிறார். உடனே சுரேகா அவரை ரொம்ப கேவலமா திட்றாருக்கா என்று சொல்லுகிறார்.

சரி வா அவ எத்தனை பவுன்ல எடுக்குறான்னு பாக்கலாம் என்று வர நந்தினி இடம் எடுத்தாச்சா என்று கேட்க நாலு டிசைன் எடுத்து வச்சிருக்கேன் ஆனா இதுல எது எடுக்கிறதுன்னு தெரியல ஒன்று சொல்லுகிறார். சரி போட்டு பாரு எப்படி இருக்குன்னு பார்க்கலாம் என்று சொன்ன நந்தினி ஒரு செயினை எடுத்து வைத்து போட்டு பார்க்க இது ரொம்ப பெருசா இருக்கு என்று மாதவி சொல்லுகிறார். எத்தனை பவுன் என்று கேட்க ஏழு பவுனு என்று சொல்ல, சுரேகா உனக்கு எத்தனை பவுனுக்கா போட்டாங்க என்று அஞ்சு என்று மாதவி சொல்லுகிறார். நானோ சின்னதா தான் வாங்கணும்னு நினைச்சேன் ஆனா சூர்யா சார் தான் வற்புறுத்தி இது மாதிரி எடுக்க சொன்னார் என்று சொன்ன உடனே அருணாச்சலமும் சூர்யாவும் வந்து இன்னும் மாமா எடுத்துக்கிட்டு இருக்க சீக்கிரம் என்று சொல்ல, நந்தினியும் ஒரு செயினை எடுத்து கொடுக்கிறார்.

மறுபக்கம் சுந்தரவல்லி தோழியுடன் வெள்ளி விளக்குகளை பார்த்துக் கொண்டிருக்க குடும்பத்தினர் அனைவரும் பார்த்து பதறுகின்றனர். உடனே சூர்யா இப்ப எதுக்கு எல்லோரும் பேய பார்த்த மாதிரி பதறிங்க என்று சொல்ல, உடனே அசோகன் பேய் இல்லப்பா உன் தாய் என்று சொல்ல சூர்யா பார்த்தவுடன் உடனே சுந்தரவல்லி முன் நின்று தாலி செயினை எடுத்து நீட்டி இது என் பொண்டாட்டிக்காக 7 பவுன்ல வாங்குனது எப்படி இருக்கு ஆன்ட்டி சூப்பரா இருக்கா இன்னும் 15 பவுன்ல வாங்கலாமா சொல்லுங்க ஆன்ட்டி என்று சுந்தரவல்லி வெறுப்பேத்த சுந்தரவல்லி கடுப்பாகிறார். உடனே அசோகன் நாங்க வெளியே போறோம் என்று சொல்லிட்டு வந்தோம்ல நீங்க சொல்லாம வந்து தப்பு பண்ணிட்டீங்களே அத்தை என்று சொல்ல, சுந்தரவல்லி எதுவும் பேசாமல் கோபமாக வெளியே சென்று விடுகிறார்.

சுந்தரவல்லி கோபமாக வீட்டுக்குள் இருக்க குடும்பத்தினர் வாழ்ந்தவுடன் கோபமாக நடந்து கொள்கிறார். அருணாச்சலம் நந்தினியோட தாலிக்கயிறு அறுந்து போற மாதிரி இருந்தது அதனாலதான் இது மாதிரி பண்ணனும் என்று சொல்ல அருந்தா அறுந்து போகட்டும் அவை இந்த வீட்டோட மருமகளே இல்லைன்னு சொல்ற ஆனா எல்லாரும் தாலி பிரித்து கொடுக்கிற அளவுக்கு போயிட்டீங்களா என்று கோபப்படுகிறார். மாதவி கேசவர நீ பேசாத அதுதான் அவங்க கூட சேர்ந்து எல்லாமே வாங்கி செய்ய போயிட்டீங்க இல்ல என்று திட்டுகிறார். உடனே அருணாச்சலம் கோபப்பட்டு இந்த மாதிரி எல்லாம் பண்ணுவேன்னு தெரிஞ்சு தான் நாங்க சொல்லல என்று சொல்லுகிறார்.

சுந்தரவல்லி கடைசியான உனக்கு சொல்ற தாலி பிரிச்சு கோக்கிறது என்கிறது ஒரு சென்டிமென்ட் இதுல ஏதாவது பிரச்சனை பண்ணனும்னு நினைச்சேனா அவ்வளவுதான் அது மட்டும் இல்லாம இது உன் பையன் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்று சொல்லிவிட்டு கோபமாக உள்ளே சென்று விட சுந்தரவள்ளியும் சென்று விடுகிறார். உடனே மாதவி சுந்தரவல்லி சமாதானப்படுத்த போக சுரேகா அவரை தடுத்து நிறுத்துகிறார். அம்மா நம்ப மேல கோபமா இருக்காங்க என்று சொல்ல என்ன சொன்னாலும் நம்ம பேசி பார்த்துக்கலாம் வா என்று அழைத்து செல்லுகிறார். ரூமில் சுந்தரவல்லி கோபமாக உட்கார்ந்து கொண்டிருக்க நாங்க வேணான்னு தான் சொன்னோம் அப்பா கம்பெல் பண்ண அதனால தான் நாங்க போனோம் என்று சொல்ல இந்த வீட்ல இந்த வீட்ல நான் நம்பாதவங்க நீங்க ரெண்டு பேரும் தான் என்று சொல்ல எங்கள சந்தேகப்படாதீங்க எப்பவுமே நாங்க உங்க பக்கம் தான் என்று சொல்ல, உங்க அப்பா கட்டாயப்படுத்தி போனாங்கன்னு சொல்றீங்க ஆனா என்கிட்ட ஏன் உண்மைய சொல்லல என்று கேட்க அப்பா தான் சொல்ல வேணாம்னு சொல்லி எங்களை கூட்டிட்டு போயிட்டாரு என்று சொல்லுகிறார். அப்போ உங்க அப்பா சொல்லி தான் நகை கடைக்கு போனீங்களா என்று கேட்க, மாதவி சூர்யா காததாமா என்று சென்டிமென்ட் சொல்லும்போது என்னால எதுவும் பேச முடியல என்று மாதவி சொல்ல அதற்கு உங்க அப்பா சொல்றது மட்டும்தான் கேப்பீங்களா இல்ல நான் சொல்றது கேப்பீங்களா என்று சொல்லிவிட்டு இந்த தாலி அவ கழுத்துல ஏறக்கூடாது என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

வீட்ல நடக்க இருந்த தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷனில் யாருமே நினைச்சுப்பாக்க முடியாத ஒன்று நடந்திருச்சு. மாதவி பதறிப் போய் வந்து தாலி செயின் காணோம் என்று சொல்லுகிறார்.

சூர்யா சார் எடுத்த முடிவு சுந்தரவல்லி அம்மாவை ஒரு குற்ற உணர்ச்சியில நிக்க வச்சிருக்கு. சூர்யா இன்னும் பத்து நிமிஷத்தில் நகை எங்க வரலனா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பேன் என்று சொன்ன போலீஸ் வீட்டுக்கு வந்து எந்த ரூம்ல என்று கேட்க சுந்தரவள்ளியை கை நீட்டுகிறார். ஆனால் சுந்தரவல்லி அனுமதிக்காததால் ரொம்ப பண்ணாங்கனா பூட்டை உடைத்து விட்டு உள்ள போக சொல்லுவேன் என்று சொல்ல நந்தினி சுந்தரவல்லி அம்மாவை இதிலிருந்து எப்படி காப்பாற்றுவது என்று யோசிக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 05-01-25
moondru mudichu serial today promo update 05-01-25